செல்போனிலிருந்து வரும் பேய்!

சினிமா வந்த காலத்திலிருந்து பேய்க்கதைகள் என்றால் எப்போதும் ஒரு தனி மவுசுதான். பேய்க்கதைகள் என்றாலே ஒரு ஆவி இன்னொரு உடம்புக்குள் ஊடுருவி பலி வாங்கும் அல்லது பழி வாங்கும். இதுதான் பேய்க்கதைகளின் எவர்கிரீன் ஒன் லைன். இதிலிருந்து மாறுபட்டு யோசித்திருக்கிறார் ‘கேட்காமலே கேட்கும்’ படத்தின் இயக்குநர் கே.நரேந்திர பாபு. இவர் கன்னடத்தில் ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். அதில் மூன்று படங்கள் சூப்பர் ஹிட் ரகமாம். இந்தப் படம் டெக்னாலஜி பேய்ப்படமாக உருவாகியுள்ளதாம். செல்போனிலிருந்து பேய் ஊடுருவி இன்னொரு செல்போனுக்கு செல்கிறது.

அதன் பிறகு நடக்கும் கலாட்டாவை ஆவி பறக்க சொல்லியுள்ளார்களாம். செல்போனில் பேய் ஊடுருவும் காட்சிகள் பார்ப்பவர்கள் திகிலடையுமளவுக்கு மிரட்டலாக வந்துள்ளதாம். கதைக்கேற்ப டெக்னாலஜிகல் அம்சங்கள் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளதாம். சென்னை, மன்னார், கொடைக்கானல், கர்நாடக மடக்கேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் புதுமுகங்கள் கிரண், திவ்யா, வந்தனா, பிரக்ணா என்.பாபு, மஞ்சுநாத், மது, ஜெயராஜ், பைரக கவுண்டர், நாகராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Tags: