வன்முறை வெடித்ததற்கு காரணம் நான் தான்: – குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகள் வாக்குமூலம்

கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி பாலியல் குற்றத்திற்காக குர்மீத் சிங்க்கு தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அரியானா மற்றும் பஞ்சாப்பில் வன்முறை வெடித்ததற்கு காரணம் நான் தான் என்று குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகள் வாக்குமூலம் அளித்துள்ளார். வன்முறையை தூண்டியதும், ஆதரவாளர்களுக்கு மேப் தயார் செய்து கொடுத்ததும் நான்தான் என ஹனிபிரீத் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாமியார் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து ரோதக் மாவட்டத்தில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டார். பாலியல் பலாத்கார சாமியார் குர்மீத் சிங் குற்றவாளி என ஆகஸ்ட் 25ம் தேதி சிபிஐ நீதிமன்றம் அறிவித்ததும் அரியானா மற்றும் பஞ்சாப்பில் வன்முறை வெடித்தது. அரியானாவில் வன்முறை வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வன்முறையை தூண்டிவிட்டதில் பலாத்கார சாமியார் குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகளுக்கு முக்கிய பங்கு உள்ளது எனவும் வன்முறையை தூண்ட 1.25 கோடி ஹனிபிரீத் சிங் செலவிட்டுள்ளார் என்றும் தகவல் வெளியானது.

Tags: