கனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய கடத்தல் சம்பவம்: எச்சரிக்கை தகவல்!

கனடாவில் காரில் சென்ற பெண்ணை வழிமறித்து தாக்கி அவரை கடத்துவதற்கு முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Chaleur Regionல் கடந்த 23ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது பெண்ணொருவர் காரில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் நின்ற பெண் கையை காட்டி காரை நிறுத்தினார்.
    
பின் தனது வேன் டயரை மாற்ற உதவுமாறு கூற காரில் வந்த பெண்ணும் கீழே இறங்கினார். அந்த சமயத்தில் அங்கு வந்த இரண்டு ஆண்கள் அப்பெண்ணை தாக்கி தங்கள் வேனுக்குள் இழுத்து செல்ல முயன்றனர்.

ஆனால் அவர்களிடம் இருந்து தப்பிய அவர் தனது வாகனத்தை எடுத்து வேகமாக சென்றார். பின்னாலேயே வேனில் அவர்கள் துரத்திய நிலையில் பிறகு வேறு வழியாக சென்றுவிட்டனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட பெண் ஆங்கிலம் மற்றும் பிரஞ்ச் மொழி பேசுபவர் என தெரியவந்துள்ளது.

அவருடன் இருந்த இரண்டு ஆண்களில் ஒருவருக்கு கண்ணில் காயம் பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இவர்கள் குறித்து தகவல் தெரிந்தாலோ ஆதார வீடியோ காட்சிகள் எதாவது இருந்தாலோ தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கூறியுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!