மகிந்த அணியினரின் பதவிகள் பறிப்பு – சந்திரிகாவுக்கு புதிய பதவி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கமவும், மகிந்தானந்த அழுத்கமகேயும் நீக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் குமார வெல்கம மத்துகம அமைப்பாளர் பதவியில் இருந்தும், மகிந்தானந்த அழுத்கமகே, நாவலப்பிட்டிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, அத்தனகல தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags: , , ,