நாடுகளை ஏமாற்றிய எமக்கு எப்படி உதவி கிடைக்கும்?

நாம் வங்குரோத்து நிலையில் உள்ளதுடன், பல்வேறு நாடுகளை ஏமாற்றியுள்ளோம். இதனால், வெளிநாட்டு உதவிகள் எமக்கு முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது, என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
    
ஜப்பானுக்கு மூன்றரை பில்லியன் ரூபாய்கள், சீனாவுக்கு 7 பில்லியன், இந்தியாவிற்கு 4 பில்லியன் என நிதியை வாங்கி ஏமாற்றியுள்ளோம். ஆகவே எவரும் அளவுக்கு அதிகமாக உதவப்போவதில்லை
நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட வேளையில், பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள தகுதியானவர்கள் பலர் கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டு இருந்த வேளையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பொறுப்பேற்றமைக்காக முதலில் அவரை பாராட்ட வேண்டும்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்கவும் சில தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கு முதலில் சகலரது ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ளும் விதமாக சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க எப்படியும் சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு எம்மை இந்த நெருக்கடியில் இருந்து மீட்பார். அதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தையும் முன்னெடுப்பார், அத்துடன் கடன் மீள் கட்டமைப்பு விடயங்களை முன்னெடுப்பார் என நம்புகின்றனர்.

ஆனால் இவை அனைத்துமே பிழைத்தால் அடுத்ததாக என்ன செய்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!