அத்தியாவசிய பொருட்களின் இருப்பு கணக்கீடு – வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு

நாட்டில் அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு கணக்கிடப்பட்டு வருவதாக வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கணக்கீடுகள் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு தேவையான அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் இருப்புகள் தீர்மானிக்கப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வரவிருக்கும் உணவு நெருக்கடி மற்றும் அதற்கு முகங்கொடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி  விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு  தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்தப் பருவத்தில்  நெற் செய்கை 50 வீதம் குறைவடையுமென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், 3 இலட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேயர் காணியில் மாத்திரம் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!