அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் மனைவி பலியான சோகம் தாங்காமல் உயிரிழந்த கணவர்!

டெக்சாஸின் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஆசிரியர் ஒருவரின் கணவர், தனது மனைவியின் மறைவை தாங்க முடியாமல் மாரடைப்பு எற்பட்டு உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகணத்தில் உள்ள Robb Elementary பள்ளியில் அதன் முன்னாள் மாணவர் சால்வடார் ராமோஸ்(18) நடத்திய சரமாறி துப்பாக்கி சூடு தாக்குதலில் 19 பிஞ்சு குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    
மொத்தம் 21 உயிர்கள் வரை பறித்த இந்த கொடூர தாக்குதலின் பாதிப்பு அமெரிக்காவை மட்டும் இல்லாமல் உலக நாடுகளையே சோகத்தில் உலுக்கி வரும் நிலையில், சால்வடார் ராமோஸ் நடத்திய தாக்குதலின் போது தைரியாமாக செயல்பட்டு பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய முயன்று உயிரிழந்த இர்மா கார்சியா என்ற ஆசிரியரின் கணவரும் நேற்று அவரது மனைவியின் இழப்பு தாங்க முடியாமல் சோகத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில் மனைவி (Irma Garcia)இறந்த சோகம் தாங்கமுடியாமல் அவரது கணவர் Joe Garcia-யும் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுத் தொடர்பாக அவர்களது உறவினர் ஜான் மார்டினெஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இர்மா கார்சியா கொல்லப்பட்ட அதிர்ச்சியில் வருத்தம் தாங்கமுடியாமல் அவரது கணவர் ஜோ கார்சியா-யும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார் என்பதை மனவேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இர்மா கார்சியா மற்றும் ஜோ கார்சியா-விற்கு திருமண ஆகி 24 ஆண்டுகள் ஆனதுடன் நான்கு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!