இந்திய- சிறிலங்கா இராணுவங்களின் கூட்டுப் பயிற்சி இன்று ஆரம்பம்

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் இணைந்து மேற்கொள்ளும், மித்ரசக்தி-2017 கூட்டுப் பயிற்சி, இன்று இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு வாரங்கள் நடக்கவுள்ள இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க, சிறிலங்கா இராணுவத்தின் சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் உள்ளிட்ட 120 படையினர் புனே சென்றுள்ளனர்.

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினருக்கிடையிலான ஒத்துழைப்பு, பயிற்சி ஆற்றல்களைக் கட்டியெழுப்புதல், மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளும் நோக்கில் இந்த மித்ரசக்தி கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்தக் கூட்டுப் பயிற்சியின் நிறைவு நிகழ்வு வரும் 25ஆம் நாள் புனேயில் நடைபெறவுள்ளது.

இரு நாட்டு இராணுவங்களுக்கும் இடையில் நடத்தப்படும் ஐந்தாவது கூட்டுப் பயிற்சி இதுவாகும்.

Tags: