சிறிலங்கா வந்துள்ள அமெரிக்காவின் பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர்

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின், பிரதி உதவிச் செயலர் கேணல் ஜோ பெல்டர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆசிய பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான, பிரதி உதவிச் செயலராக, கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்ட, கேணல் ஜோ பெல்டர் அமெரிக்க இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியாவார்.

இவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

நேற்று கொழும்பு வந்த கேணல் ஜோ பெல்டர் அரசாங்க பிரமுகர்கள், அரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகள், மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர், சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

Tags: , ,