“போரை நிறுத்துங்கள்” – 6 வயது உக்ரைன் குழந்தை அனுப்பிய உருக்கமான கடிதம்!

போரை விரைவாக நிறுத்துங்கள் என தாய் தந்தைகளை இழந்த உக்ரைனின் 6 வயது சிறுவன் இல்லியா கோஸ்டுஷேவிச் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

உக்ரைன் மீது 93வது நாளாக ரஷ்யா அவர்களது போர் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றனர், இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலுக்கே பெரும்பாலான உக்ரைனிய நகரங்கள் சிதைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுவிடடது.

  
அந்தவகையில் உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலையும் ரஷ்ய படையினரின் தங்களது பலவார முற்றுகைக்கு பிறகு முற்றிலுமாக சிதைத்ததுடன் கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டுவந்துள்ளனர்.

இதில் நூற்றுக்கணக்கான உக்ரைனிய பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என பலர் தங்களது சொந்த இருப்பிடத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

இந்தநிலையில் அவ்வாறு மரியுபோலில் தாக்குதலில் தாய் தந்தைகளை இழந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்ட இல்லியா கோஸ்டுஷேவிச்(6) போரை உடனடியாக நிறுத்துங்கள் என உக்ரைனிய தேசிய கொடி வரையப்பட்ட கடிதத்தை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் அன்புள்ள போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு, இந்த போர் விரைவாக முடிவடைய வேண்டும், அப்போது தான் மக்கள் உயிரிழக்க மாட்டார்கள், நான் எனது சொந்த ஊரான மரியுபோலில் கால்பந்து விளையாட வேண்டும், மேலும் உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் போர் குறித்த அனுபவங்களை பெறக்கூடாது என நான் விரும்புகிறேன் என எழுதியுள்ளார்.

அத்துடன் எனது சார்பில் பிரித்தானியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஹாய் ஒன்றை சொல்லுங்கள், எங்களுக்கு உதவியதற்கு நன்றி, இந்த போரில் நிச்சியாமாக வெற்றி பெறுவோம் எனவும் எழுதியுள்ளார்.

மேலும் இந்த கடிதத்தை இல்லியா கோஸ்டுஷேவிச்(6) FC ஷக்தரின் என்ற கால்பந்து பயிற்சி அணியின் நிர்வாகிகள் Darijo Srna-விடம் கொடுத்து, பிரித்தானிய பிரதமரிடம் இதனை கொண்டு சேர்க்கும்படியும் வேண்டிக் கொண்டுள்ளார்.

இல்லியா கோஸ்டுஷேவிச்(6) ஸ்லோவியன்ஸ்கில் வசிக்கும் மரியா மற்றும் வோலோடிமிர் பெஸ்பாலியின் குடும்பத்தினர் அரவணைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!