17 பெண்களை கொலை செய்த கொலையாளிக்கு ஆயுள் தண்டனை!

தெலங்கானா மாநிலம், குச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் அலிவேலம்மா. இவரை மர்ம நபர் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக புகார் வந்தது. இதுதொடர்பாக மகபூப் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இதில், போலீசாருக்கு அதே பகுதியில் உள்ள பழைய குற்றவாளியான சீனு மீது சந்தேகம் ஏற்பட்டது.
    
இதற்கு காரணம் சீனு ஏற்கனவே 9 பெண்களை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 2011ம் ஆண்டு வெளியில் வந்திருந்தார். இதையடுத்து போலீசார் சீனுவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியானது. இதில், சீனு சிறையில் இருந்து விடுதலையாகி வந்த பின், தனது தம்பி மற்றும் 7 பெண்களை கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

இவன், கள்ளு கடைகளுக்கு மது குடிப்பதற்காக வரும் பெண்களைக் குறிவைத்து கொலை செய்வது இவரது ஸ்டைல். கொலை செய்துவிட்டு, அவர்கள் அணிந்திருந்த தங்கம், வெள்ளி நகைகளைப் பறித்து தன் மனைவியிடம் கொடுத்துவந்தார். இறுதியில் கடந்த 2019ல் தனது சொந்த தம்பியை கொலை செய்யத் துணிந்த சீனு, போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.

திருடிய சொத்துக்களைப் பதுக்கிவைத்திருந்த சீனுவின் மனைவி சாலம்மாவும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. இதையடுத்து, தொடர் கொலை குற்றச் சம்பவங்களை செய்ய சீனுவுக்கு மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!