இலங்கைக்கு அனுப்பப்பட்ட மருந்துகளை விடுவிக்குமாறு சுகாதார அமைச்சர் பணிப்புரை

அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகளை உடனடியாக விடுவிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களினால் குறித்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நாட்டை வந்தடைந்து 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அவற்றை கட்டுநாயக்கவில்  இருந்து கொழும்பிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலே, குறித்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உடனடியாக விடுவிக்குமாறு சுகாதார அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!