அரிசி விலை 1,000 ரூபாவைத் தாண்டும்!

எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஒரு கிலோ அரிசியின் விலை, 1,000 ரூபாவைத் தாண்டுமென கூட்டு விவசாய அமைப்புகளின் சங்கம் எச்சரித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, பெரும்போக பயிர்செய்கைக்குத் தேவையான உரத்தை பெற்றுக்கொடுப்பது பொறுப்புகூறவேண்டியவர்களின் கடப்பாடாகும் என தெரிவித்துள்ள கூட்டு விவசாய அமைப்புகள் சங்கத்தின் செயலாளர் புஞ்சிரால ரத்நாயக்க, எமது யோசனைகளின் பிரகாரம் செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

உரத்தை இறக்குமதிச் செய்துகொள்வதற்காகவேனும், இலங்கைக்கு டொலர்களை அனுப்புமாறு, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், ஒக்டோபர் மாதமளவில், நாட்டில் அரிசி தட்டுப்பாடு கட்டாயம் நிலவும் என்றும் எடுத்துரைத்தார்.

இரசாயன உர இறக்குமதியை தடைச்செய்வதற்கு ஜனாதிபதி எடுத்திருந்த தீர்மானத்தின் காரணமாக, விவசாயிகள் இவ்வாரான நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று கூட்டு விவசாய அமைப்புகள் சங்கத்தின் தலைவர் முதித பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!