சட்டத்தரணிகள் முன்னிலையாகப் போவதில்லை!

சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகப் போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி பெரேரா, இந்த வழக்கை விசேட நிதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
    
மர்மமான முறையில் உயிரிழந்துள்ள அட்டுலுகம சிறுமியின் வீட்டுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், அஜித் பி பெரேரா உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி அஜித் பி பெரேரா, அட்டுலுகம சிறுமியின் உயிரிழப்புக்குக் காரணமான நபர் கண்டறியப்பட வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணைகள் விசேட நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற கொடூரமான குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாதென காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் குற்றவாளி கண்டறியப்பட்டால் அந்த குற்றவாளிக்கு சார்பாக பாணந்துறை நீதிமன்றத்தில் உள்ள எந்தவொரு சட்டத்தரணிகளும் முன்னிலையாகப்போவதில்லை என சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!