அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய 10 வயது சிறுவன்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் மிகப்பெரிய துப்பாக்கி சுட்டை நடத்தப்போவதாக மிரட்டல் குருஞ்செய்தி அனுப்பியதை தொடர்ந்து, சிறுவனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே பகுதி ராப் எலிமெனண்டரி பள்ளியில் சால்வடார் ராமோஸ் 18 என்ற முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கி சுட்டில் 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர்.
    
இந்த தாக்குதல் சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, நாட்டின் பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், துப்பாக்கி கலாச்சாரத்தின் மீதான தீவிரமான கட்டுபாடுகள் வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இந்தநிலையில், உவால்டே சோகம் நடைப்பெற்று 10 நாள்கள் நிறைவு பெறுவதற்குள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் மிகப்பெரிய துப்பாக்கி சுட்டை நடத்தப்போவதாக மிரட்டல் குருஞ்செய்தி அனுப்பி இருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஃபோர்ட் மியர்ஸில் உள்ள லீ கவுண்டி ஷெரிப் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்தாம் வகுப்பு மாணவனின் இந்த மிரட்டல் குருஞ்செய்தியை சனிக்கிழமை அறிந்தாகவும், உடனடியாக உள்ளூர் அச்சுறுத்தல் அமலாக்கக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணையை தொடங்கியதாகவும் தெரிவித்தது.

மேலும் சம்பவத்தின் தன்மை காரணமாக, இளைஞர் சேவைகள் குற்றப் புலனாய்வு பிரிவு இந்த வழக்கை ஏற்றுக் கொண்டது எனவும் ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து லீ கவுண்டி ஷெரிப் கார்மைன் மார்செனோ தெரிவித்த அறிக்கையில், டெக்சாஸின் உவால்டேயில் நடந்த சோகத்திற்கு பிறகு, இந்த மாணவரின் நடத்தை மோசமாக உள்ளது என தெரிவித்தார்.

அத்துடன் எங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வது மிக முக்கியமானது மற்றும் எங்கள் பள்ளிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் வழக்கு தொடர்பான தகவல் தெரிந்தவுடன் எனது குழு வினாடி நேரம் கூட தயங்கவில்லை, கொஞ்சம் தவறிழைப்பது போல் செயல்படுவதற்கு இது நேரம் இல்லை மற்றும் வேடிக்கையானது அல்ல என தெரிவித்தார்.

இந்த சிறுவன் போலி தனமான அச்சுறுத்தலை வெளியிட்டு, இப்போது அதற்கான உண்மையான விளைவுகளை அனுபவித்து வருகிறார் என தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!