குடை பிடித்துக் கொண்டு பரீட்சை எழுதிய மாணவர்கள்- விசாரணைக்கு உத்தரவு!

மழைநீர் ஒழுகும் வகுப்பறைகளில் அமர்ந்து மாணவர்கள் பரீட்சை எமுதியமை குறித்து விசாரணை செய்ய கல்வி அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
    
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் குடையை பிடித்தவாறு மழைநீர் ஒழுகும் வகுப்பறைகளில் அமர்ந்து பரீட்சை எமுதும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுமுன்தினம் மாணவர்கள் குடையை பிடித்தவாறும், அழுக்கு படிந்த விடைத்தாள்களுடன் கசிந்த வகுப்பறைகளில் பரீட்சைக்கு அமர்ந்திருந்த படங்கள் வெளியானதை அடுத்து கல்வி அமைச்சு குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் வெள்ள நீர் நிறைந்த வகுப்பறைகளில் அமர்ந்து பரீட்சை எழுதிய மாணவர்களிடம் விசாரணை நடத்துமாறு கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ள நிலையில், பரீட்சைகள் திணைக்களத்தினால் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வகுப்பறைத் தேர்வு, வகுப்பறைகளை மாற்றத் தவறியது, சம்பவம் குறித்து தேர்வுத் துறைக்கு புகார் தெரிவிக்காதது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!