ரஷ்ய விமானம் கட்டுநாயக்கவில் தடுத்து வைப்பு!

ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் பிரகாரம், ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்குச் செல்லவிருந்த ஏ330 ரக விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
    
அயர்லாந்து நிறுவனமான Celestial Aviation Trading Limited நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாட்டினை விசாரித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்கவினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வரும் 16ம் திகதி வரை அமலில் இருக்கும்.

பிரதிவாதி விமான சேவைக்கு சொந்தமான விமானம் இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!