இந்திய கடன் உதவியின் மூலம் பெறப்பட்ட உணவுப்பொருட்களை வழங்குவதில் பாரபட்சம் ..!

இந்திய கடன் உதவியின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள பொருட்களை விநியோகிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளது.


இதற்கமைய இந்திய கடன் உதவியின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பிரத்தியேகமாக ஒருவர்த்தகருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.


இதனால் ஏனைய இறக்குமதியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!