மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் துமிந்த சில்வா..!

வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நேற்றைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேறவிருந்த நிலையில், அவரை கைது செய்து வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் காணப்பட்டனர்.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொலன்னாவை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிய பிரயோக சம்பவத்தில் கொலை குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட துமிந்த சில்வாவிற்க மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டார்.


அதனை எதிர்த்து பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் புதல்வியான ஹிருணிக்கா பிரேமசந்திர மேன்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.


குறித்த மனுவினை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் பொது மன்னிப்பிற்கு தடைவிதித்து மீண்டும் கைது செய்யுமாறு உத்தரவிட்டமை குறிப்பி;டத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!