ஊடகங்களை ஒடுக்குவதற்கே வரி அதிகரிப்பு….

ஊடகங்களை ஒடுக்குவதற்காகவே தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல்கள் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக ஆர்வலர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்………
கோட்டா கோ ஹோம், ராஜபக்ச கோ ஹோம், நிறைவேற்று அதிகார முறை கோ ஹோம், இவ்வாறான அனைத்து கோசங்களையும் தற்பொழுது மௌனிக்க செய்துள்ளதனர்.


வரியை அதிகரித்து சமூக ஊடக செயற்பாடுகளை முடக்குவதற்கு திர்மானித்துள்ளனர். கர்ப்பிணி தாய்மார்கள், சிறுவர்கள், உள்ளிட்ட அனைவரும் போக்கு குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களின் ஆரோக்கியம் தொடர்பில் நர்ஙகள் கேள்கி எழுப்பிய போது பலரும் புன்னகைத்தனர். பாரிய உணவு பற்றாக்குறை நாட்டில் ஏற்பட்டள்ளது. பசுமை விவசாயத்தின் வாயிலாக எமது நாட்டிமன் விவசாயதத்துறையை அழத்தொழித்துள்ளனர். தற்பொழுது நாற்று நடுமாறும் விவசாயத்தினை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கின்றனர்.

நோயாளர்களுக்கு Nவையான அத்தியாவசிய ஒளடதங்கள் இல்லை. உயிர்காக்கும் ஒளடதங்கள் இல்லை. எவ்வாறாயினும் பதவிகளுக்கும் பதவிகளை பெற்று;ககொள்வதற்கும் தயாராகவுள்ள நபர்களுக்கு பற்றாக்குறை இல்லை. அனைவரும் ஜனாதிபதியாகவேண்டும். அனைவரும் பிரமராகவேண்டும் என்பதினால்தான் இந்நாட்டில் அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளுது. இலங்கைக்கான வெளிநாடுகளின் தூதுவர்கள் தங்களுடைய நாட்டிற்கே சிகிச்சைக்காக செல்கின்றனர். ஆனால் நிதி உதவியை பெற்றுக்கொள்ள செல்கின்றனர் என பொய்யுரைத்து மக்களை திசைதிருப்புகின்றனர் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!