யாழ். பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் கைது!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் மதுபோதையில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
    
இதன்போது மாணவர்கள் ஒன்றுசேர்ந்து குறித்த இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!