தோற்றவர்களால், தோற்கடித்தவர்களுக்கான தோற்றுப்போன அரசாங்கம்!

தோல்வி, தோல்வி, தோல்வி
தோல்வியுற்றவர்களால் தோல்வியுற்றவர்களுக்காக நடத்தப்படும் தோல்வியுற்ற அரசாங்கத்தை இன்று இலங்கை கொண்டிருக்கிறது என்று கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று தமது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

பொருளாதாரத்தை மீட்டெடுத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளுக்கே இந்த தருணத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

எனினும் தற்போது இலங்கையர்களுக்கு ஒரு நொண்டி கழுதையே கிடைத்துள்ளது.

தீராத அதிகார பசி
பெயருக்குத் தகுதியான ஒரு தேசிய அரசாங்கம் என்பது நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும்.
எனினும் தற்போதைய நிர்வாகம், தீராத அதிகார பேராசையால் உந்தப்பட்ட ஒரு கூட்டமாக மட்டுமே உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை, சஜித் பிரேமதாசவை விட மிகவும் மோசமானது.

சிறிசேனவுக்கு முடியாது

சிறீசேன, பிரேமதாசாவைப் போல் அரசாங்கத்தை எதிர்க்க முடியாது.
ஏனெனில் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதியாக இருக்கிறார்.

மேலும் அவர் பழிவாங்கும் குணம் கொண்ட ராஜபக்சர்களுக்கு விரோதமாகத் திரும்பினால், அவருடைய 14 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழுவில் இருந்து மேலும் சில உறுப்பினர்களை இழக்க நேரிடும்.

எனவே அமைச்சரவையில் இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக சிரித்துச் சிரித்துச் சகித்துக்கொள்வதையே அவர் உத்தியாக தேர்ந்தெடுத்துள்ளார்.

அவர் ஜனாதிபதியாக இருந்த போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தவறிவிட்டார்.

எனவே, ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக அந்தப் பணியை அவர் நிறைவேற்றமுடியாது.

தோல்வியில் பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு மே தின பேரணியை கூட நடத்த முடியாது, கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் தோல்வியடைந்து வருகிறது.

இந்தநிலையில் நல்லாட்சி பயணத்தில் சிறிசேனவின் துணையாக இருந்த ரணில் விக்ரமசிங்க, சிறிசேனவை விட மிகப் பெரிய தோல்வியடைந்தவராவார்.

2015 முதல் 2019 வரை பிரதமராக இருந்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்தத் தவறி 2020 பொதுத் தேர்தலில் தனது பதவியை இழந்தார்.

ஆனால் அவர் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்து, அரசியல் ரீதியாக இறந்து போன ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

21வது திருத்தம் நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதி தன்னிச்சையாக பிரதமரை நீக்குவதைத் தடுக்கும் ஏற்பாடு காரணமாக, அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகவும் சாதகமாக அமையும்.

வேட்டை நாயும் முயலும்
அத்துடன் பிரதமர் விக்கிரமசிங்கவின் கண்காணிப்பில் நாடு கணிசமான அளவில் முன்னேற்றம் அடைந்தால், அது, சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக்கு பின்னடைவாகவே இருக்கும்.

இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தமது இலக்கை அடைய வேண்டுமானால், சிறிசேன முயல், வேட்டை நாய்களுடன் ஓடுவதை நிறுத்த வேண்டும்.

அத்துடன் உதவி கேட்டு அழும் மக்களின் பக்கம் அந்த இருக்க வேண்டும் என்று ஆங்கில ஊடகத்தின் ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!