ஜேர்மனிக்கு தப்பிச்சென்ற உக்ரைன் பெண்களுக்கு நேர்ந்த கதி!

ஜேர்மனியில் ரயில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தவர்களில் 2 உக்ரைன் பெண்களும் அடங்குவர். ஜேர்மனியில், கார்மிஷ்-பார்டென்கிர்சென் என்ற ஸ்கை ரிசார்ட் நகருக்கு அருகிலுள்ள பர்கிரேனில் வெள்ளிக்கிழமை மதியம் 12:15 மணியளவில் மியூனிக் நோக்கிச் சென்ற ரயில் தடம் புரண்டதில் ஐந்து பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் 32 மற்றும் 70 வயதுக்குட்பட்ட பெண்கள் என்று கூறப்படுகிறது.
    
அவர்களில் இரண்டு பெண்கள், விளாடிமிர் புடினின் ரஷ்ய படையெடுப்பால், உக்ரைனில் இருந்து தப்பி ஜேர்மனிக்கு வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

அவர்களில் ஒரு உக்ரேனிய பெண்ணின் மகன்களும் விபத்தில் சிக்கினார், அதின் ஒரு மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தடம் புரண்ட இரயில் பெட்டிகளை தூக்குவதற்கான ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, ஐந்தாவதாக ஒருவர் ரயிலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டார்.

“இந்த நேரத்தில் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை, ஆனால் என்னால் இன்னும் உறுதியாக சொல்ல முடியாது” என்று பிராந்திய துணை பொலிஸ் தலைவர் பிராங்க் ஹெல்விக் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!