அதிக விலையில் அரிசி விற்பனை – சோதனை நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீதான சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு  வழங்குமாறு  நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களிடம்  கோரிக்கை விடுத்துள்ளது.

 ஒரு கிலோகிராம்  நாடு  அரிசி   220 ரூபாவாகவும்,    ஒரு கிலோகிராம் சம்பா அரிசி   230 ரூபாவாகவும், கிரி சம்பா கிலோகிராம்   260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் அதிகாரசபையினால் அண்மையில்  வெளியிடப்பட்டது.

 இந்த நிலையில்  கட்டுப்பாட்டு விலையினை மீறி அதிக விலைக்கு அரிசியினை விற்பனை செய்த  மூன்று வர்த்தகர்கள் மீது   நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் அவர்களில் வர்த்தகர்கள் இருவருக்கு 1ஒரு லட்சம் ரூபா மற்றும் 5 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விலையில் நுகர்வோருக்கு அரிசி விற்பனை செய்யும் வகையில் சில்லறை விற்பனையாளர்களுக்கு அரிசியினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!