உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடாத்த ஆயத்தமாகும் தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதற்கான ஆயத்தங்களைத் தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதியுடன் தொடங்கும் ஆறு மாத காலத்திற்குள் தேர்தல் நடாத்தப்பட உள்ளது. சட்டத்தின் பிரகாரம் இவ்வாறு தேர்தல் நடாத்தப்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் அவசியம்  
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் ஓராண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓராண்டு காலம் பூர்த்தியாகி ஆறு மாதங்களில் தேர்தல் நடாத்தப்பட வேண்டிய அவசியம் தேர்தல் ஆணைக்குழுவிற்குக் காணப்படுகின்றது.

இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதிக்குள் தேர்தல் நடாத்தப்பட வேண்டியது அவசியமானது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எந்தக் காரணத்திற்காகவும் ஒத்தி வைக்கப்படாது என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!