எதிர்வரும் வாரங்களில் ஐந்து எரிபொருள் கப்பல்கள் நாட்டிற்கு

எதிர்வரும் வாரங்களில் ஐந்து எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.,

இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையான 12 நாட்களுக்குள் இவ்வாறு எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

11 மற்றும் 12 ஆம் திகதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இருகப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.,

அத்துடன் எதிர்வரும் 16 ஆம் திகதி இந்திய கடன் திட்டத்தின் இறுதி டீசல் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகஅவர் குறிப்பிட்டார்,

மேலும் எதிர்வரும் 22 ஆம் திகதி மற்றுமொரு பெட்ரோல் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதுடன் 20 ஆம் திகதிக்கு முன்னர் மசகு எண்ணெய் கப்பலொன்றை எதிர்ப்பார்த்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கூறினார்

நாட்டின் ஒரு நாளுக்கான டீசல் தேவைப்பாடு 5 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக காணப்பட்ட போதிலும் கடந்த வாரம் அது 2 ஆயிரத்து 800 மற்றும் 3 ஆயிரம் மெட்ரிக் தொன்னுக்கு இடைப்பட்ட விநியோகத்தை மேற்கொண்டாக அவர் சுட்டிக்காட்டினார்,

அத்துடன் நாளொன்றுக்கான பெற்றோல் தேவை மூவாயிரத்து 500 ஆக காணப்பட்ட போதிலும் 2 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன்னுக்கும் அதிக டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.,

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!