மொட்டுக்கு வாக்களித்த சிங்கள மக்களுக்கு சாட்டையடி பதில்கொடுத்த பசில்: சபா குகதாஸ்

நாட்டின் தற்போதைய நிலைக்குப் பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களித்த மக்களும் பொறுப்புக் கூற வேண்டும் என மொட்டுக்கு வாக்களித்த மக்களுக்குச் சாட்டையடி கொடுத்துள்ளதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஐபக்ச தனது நாடாளுமன்ற பொறுப்புரிமையை இராஜினாமா செய்த பின்னர் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் வழங்கும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனவாத கோசத்தை முன்னிலைப்படுத்த விரும்பவில்லை

அத்துடன் ராஜபக்சக்களுக்கு மூன்று தடவை மக்கள் வாக்களித்துள்ளனர். இனியும் வாக்களிப்பார்கள் எனவும் தெரிவித்தார். சிங்கள மக்கள் மத்தியில் 49 லட்சம் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தனர்.

இவர்கள் இனவாத கோசத்தை முன்னிலைப்படுத்த விரும்பவில்லை. ஆனால் கோட்டாவிற்கு 69 லட்சம் மக்கள் வாக்களித்தனர் அவர்கள் அனைவரும் பௌத்த சிங்கள கோசத்தை முன்னிலைப்படுத்தினர்.

இதன் விழைவை தற்போது முழு நாட்டு மக்களும் அனுபவிக்க வழி ஏற்படுத்தியுள்ளனர். எதிர் காலத்தில் இனவாத சிந்தனையிலிருந்து விலகி சகல இனங்களையும் ஏற்றுக் கொள்கின்ற ஆட்சியாளர்களைத் தெரிவு செய்வதுடன் வாக்களித்த மக்கள் மீது பழிபோடும் தரப்பிற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்.

சிங்கள மக்கள் தமக்கு இனவாத நச்சு விதையை விதைத்து ஆட்சி அதிகாரத்தில் ஏறி நாட்டை கொள்ளை அடிக்கும் கொள்ளையரை விரட்டும் வரை இலங்கைத் தீவை அமைதியான சுபிட்சமான நாடாக மாற்ற முடியாது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!