வடகொரிய வரலாற்றில் முதல்முறையாக உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பெண்!

வடகொரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக சோ சான்-ஹூய் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-னின் நெருங்கிய உதவியாளராக பணியாற்றியவர் சோ சான்-ஹூய்.

அந்நாட்டின் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பணியாற்றியதால், இவருக்கு தூதரக பணிகளை மேற்கொண்ட அனுபவம் உள்ளது. இந்த நிலையில், வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக சோ சான்-ஹூய் நியமிக்கப்பட்டுள்ளார்.

  இதன்மூலம் வடகொரியாவின் இந்த பதவியை ஏற்றியிருக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னாள் ராணுவ அதிகாரியான ரீ சான் குவான், தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்து வந்தார். அவருக்கு பதிலாக தற்போது சோ சான்-ஹூய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய சோ சான்-ஹூய், அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் போது ஜனாதிபதி கிம்முடன் பணியாற்றினார். மேலும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புடன் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!