யாழ். படைகளின் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர பொறுப்பேற்பு!

யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி நேற்று பதவியேற்றுள்ளார். இதற்கமைய, யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் 28 வது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர பதவியேற்றுள்ளார்.
    
இதன்போது, அனைத்து மத வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளது. மேலும்,யாழ்ப்பாண பாதுகாப்புபடை தலைமையக வீரர்களின் இராணுவ மரியாதைகள் வழங்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்புடன் புதிய கட்டளைத் தளபதி வரவேற்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் படை தளபதிகள், வடக்கின் முன் பராமரிப்பு பிரதேச தளபதி ,படைப்பிரிவு தளபதிகள், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!