எரிவாயு விநியோகம் தொடர்பில் கிடைத்த தகவல்..!

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எரிவாயு கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, எரிவாயு கப்பலுக்கு 2.5 பில்லியன் டொலர் நிதி இன்று செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 3 ஆயிரத்து 900 மெட்ரிக் டொன் எரிவாயு குறித்த கப்பலில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், குறித்த கப்பலில் இருந்து எரிவாயுவை தறையிறக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படுமெனவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், எரிவாயு விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மேலும் சில நாட்கள் அவசியமெனவும், இதனால் வரிசைகளில் மக்களை காத்திருக்க வேண்டாமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!