21வது திருத்தச் சட்டம் ஜனாதிபதிக்கு சாதகமானது: ரணில் விக்ரமசிங்க

21வது உத்தேச அரசியலமைப்புத் திருத்த சட்டம் ஜனாதிபதிக்கு சாதகமான முறையிலேயே வரையப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

21வது திருத்தச் சட்டம்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், “அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டம் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்கவே வரையப்பட்டுள்ளது.

குறித்த உத்தேச திருத்தச் சட்டம் ஜனாதிபதிக்கு எந்த வகையிலும் பாதகமானதாகவோ, எதிராகவோ தயாரிக்கப்படவில்லை. அவருக்கு சாதகமான முறையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க
இது தொடர்பாக பொதுஜன பெரமுன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஸ்தாபகர் பசில் ராஜபக்‌ஷ ஆகியோருடனும் கலந்துரையாடியுள்ளோம்.” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!