கனடாவில் 10 பேர் கொல்லப்பட்ட வழக்கு: கொலையாளியை நேரில் சந்திக்கும் பாதிக்கப்பட்டவர்கள்!

கனடாவில், வேன் மோதி இலங்கைப் பெண் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட வழக்கில், தீர்ப்புக்கு முந்தைய விசாரணை இன்று துவங்கும் நிலையில், குற்றவாளியை பாதிக்கப்பட்டவர்கள் நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறார்கள்.

2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி, அலெக் மின்னேசியன் (Alek Minassian, 25) என்னும் நபர், தன்னுடன் பாலுறவு கொள்ள பெண்கள் கிடைக்காத ஆத்திரத்தில், வேண்டுமென்றே தன் வேனைக்கொண்டு நடைபாதையில் நடந்துகொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதினார்.
    
அந்த பயங்கர சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து, மின்னேசியன் மீது 10 கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் 16 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு அறிக்கைகளை அளிக்க இருக்கிறார்கள்.

கொல்லப்படவர்களில் இலங்கையைச் சேர்ந்த ரேணுகா அமரசிங்க என்னும் பெண்ணும் ஒருவர் ஆவார்.

மின்னேசியனுக்கு 25 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வர இயலாத வகையில் ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!