வடக்கில் 347 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம்!

வடமாகாணத்தில் அடுத்தமாதம் 347 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. வடக்கில் உளவியல் பாடம் உட்பட சில பாடங்களுக்கான ஆசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கமைய, 347 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.

இவர்களில் 47பேர் உளவியல் பாட ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட குறித்த 347 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் எதிர்வரும் நவம்பர் மாதம் நியமனம் வழங்கப்படும் எனவும் வடமாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!