கனேடிய மாகாணத்தில் உலா வரும் பயங்கர மீன்: எச்சரிக்கை பதிவு!

கனேடிய மாகாணம் ஒன்றில் இரத்தத்தை உறிஞ்சும், பாம்பு போன்ற உருவம் ஒரு வகை மீன்கள் உலா வரத்துவங்கியுள்ளன. இரத்தக் காட்டேரி மீன் அல்லது sea lamprey என்று அழைக்கப்படும் அந்த மீன்கள், New Brunswick மாகாணத்திலுள்ள நீர் நிலைகளில் கூட்டம் கூட்டமாக உலாவரத் துவங்கியுள்ளன.

இது ஒரு பயங்கர செய்தி…
ஆனால், நல்ல செய்தி என்னவென்றால், இந்த மீன்கள் இப்போது இனப்பெருக்கத்துக்காக வந்துள்ளன. ஆகவே, அவற்றின் ஜீரண மண்டலம் செயல்படாமல், அவை இனப்பெருக்கத்தின் மீது மட்டுமே குறியாக இருக்கும். அதாவது, அவை உணவு எதையும் உண்ணாது.

அவை உணவு உட்கொள்ள நினைத்தாலும் அவற்றால் உணவு உட்கொள்ள முடியாது என்கிறார் மீன்வளத்துறையைச் சேர்ந்த Marc Gaden. அவற்றின் குறிக்கோள் எல்லாம், ஒரு துணையைத் தேடிக்கொள்ளவேண்டும், இனப்பெருக்கம் செய்யவேண்டும் என்பதில் மட்டுமே இருக்கும் என்கிறார் அவர்.

மற்றொரு உயிரினத்தைத் தனது வாயிலுள்ள கூர்மையான உறிஞ்சும் உறுப்புகளால் பற்றி பலமாக பிடித்துக்கொள்ளும் இந்த மீன்களால், அந்த உயிரினத்தின் சதையை திரவமாக்கி உணவாக்கி உட்கொள்ள முடியும்.

இன்னொரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த மீன்கள் வெப்ப இரத்தம் கொண்ட பிராணிகளை, அதாவது இப்படிச் சொல்லலாம், அது மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்ளாது!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!