மின்சார சட்டமூலத்தை இல்லாது செய்ய வேண்டும் – மின்சாரசபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

இலங்கை மின்சார சட்டமூலத்தை அரசாங்கம் இல்லாது செய்ய வேண்டுமென மின்சாரசபை தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, மின்சாரசபை தொழிற்சங்கங்க உறுப்பினர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் அதனை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் தொழிற்சங்க மட்டத்தில் முன்டுக்கப்படுமென சுட்டிக்காகட்டப்பட்டுள்ளது.

மின்சாரசபையில் பொறியலாளர்கள் மபியா ஒன்று செயற்படுவதாகவும், அவர்கள் அமைச்சருடனேயே இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அதானி நிறுவனத்துக்கு பெற்றுக்கொடுக்க திட்டமுடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதற்காக திருகோணமலை பகுதியில் இடம் அளவிடப்படுவதாகவும் மின்சாரசபை தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

அவ்வாறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்க்பட்டதன் பின்னர் குறித்த நிலப்பரப்பை உரிமம் கோரக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும், அவ்வாறு இலலாத பட்சத்தில் மின் விநியோகம் வழங்க முடியாது என நிபந்தனைகளை விதிக்கவும் முடியுமென மின்சாரசபை தொழிற்சங்கங்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!