முதுகெலும்பில்லாத கோழைகள் போல் ஆட்சி செய்ய முடியாது என்கிறார் வீரவங்ச

ஜனாதிபதி,பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு முதுகெலும்பில்லை எனவும் முதுகெலும்பில்லாத கோழைகள் போல் ஆட்சி செய்ய முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு பயப்படும் கோட்டாபய மற்றும் ரணில்

இவர்கள் அமெரிக்காவுக்கு பயந்து, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதை தாதமப்படுத்தி வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவர்கள் எரிபொருள் இல்லாமல் வீதியில் நொந்து போயிருக்கும் அப்பாவி மக்களை விட அமெரிக்காவை பற்றி சிந்திக்கின்றனர். அப்படியானால், அமெரிக்க எரிபொருளை வழங்க வேண்டும்.

அமெரிக்கா அப்படி எரிபொருளை தராதப்பட்சத்தில், வழங்கும் இடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். இவர்களுக்கு முதுகெலும்பில்லை.

ரணில் தனது பையில் 4 பில்லியன் டொலர்கள் இருப்பது போல் காட்டியே பதவிக்கு வந்தார்


பிரதமர் தனது பையில் நான்கு பில்லியன் டொலர்களை வைத்திருப்பது போல் காட்டியே பதவியை பெற்றுக்கொண்டார். தான் பதவியில் அமர்ந்த பின்னர், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து பணம் கிடைக்கும் எனக் கூறியே பதவியில் அமர்ந்தார்.

அப்படிதான் காட்டினார்.பேச்சுவார்த்தை நடத்துகின்றார். வெறும் செய்திகள் மாத்திரமே வெளியாகின்றன.

2024 ஆம் ஆண்டே பிரச்சினை தீர்வும் என்று கூறி சரிவராது, பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அதனை துரிதமாக செய்து காட்ட வேண்டும். செய்வது போல் தெரியவில்லை. அப்படினால், எப்படி 2024 ஆம் ஆண்டு செய்ய முடியும் எனவும் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!