ஆளும்கட்சி எம்.பிக்களை அவசரமாக சந்திக்கிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்றுஇடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    
அமைச்சரவை கூட்டத்துக்கு முன்னர், இன்றுமாலை 5.00 மணிக்கு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதுடன், எதிர்வரும் பாராளுமன்ற வாரம் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!