கனடாவை அதிரவைத்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்!

கனடாவில் நேற்றைய தினம் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மைக் காலமாக கனடாவின் பெரு நகரங்களில் ஆயுத வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
    
அந்த வகையில் றொரன்டோ, பிரம்டன், ஸ்காப்ரோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்றைய தினம் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஸ்காப்ரோவின் வாகனத் தரிப்பிடமொன்றில் இடம்பெபற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரம்டனில் நேற்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

தந்தையர் தினமன்று வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் றொரன்டோவில் பதிவாகியுள்ளது.
நான்கு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஏழு பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் இரண்டு பதின்ம வயதுடைய சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.