கனடாவில் சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட தமிழருக்கு நேர்ந்த துயர சம்பவம்!

கனடாவில் வேலை செய்து சொகுசாக வாழ போவதாக கனவு கண்ட தமிழக தமிழர் ஒருவர் , பெரும் தொகை பணத்தை இழந்து ஏமாற்றப்பட்டுள்ளசம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழகத்தின் சேலத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் விஜய சரவணன் (26). அவரது செல்போனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.
    
இந்நிலையில் அதனை உண்மை என நம்பிய விஜய சரவணன் அதில் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.

அதன் பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் கனடாவிற்கு செல்ல தயாராக இருக்கும்படியும் 5 வங்கி கணக்குகளை கொடுத்து அதில் பணத்தை டெபாசிட் செய்யும்படியும் கூறியுள்ளார். இதனையடுத்து கனடா செல்லும் ஆசையில் விஜய சரவணன் அந்த 5 வங்கி கணக்குகளில் ரூபாய் ரூ. 8 லட்சத்து 13 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

பின்னர் அந்த நபரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது விரைவில் விமான டிக்கெட் விசா ஆகியவற்றை அனுப்புவதாக கூறி உள்ளார். அதன் பின்னர் அந்த அநாமதேய நபரை தொடர்பு கொள்ள முடியாது அவரது கைபேசியை அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் சரவணன் தனது கனடா கனவு சுக்குநூறாக உடைந்ததையும், தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்து சம்பவம் குறித்து சைபர் கிரைம் பொலிஸில் புகார் செய்துள நிலையில் பொலிஸார் கனடா மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!