வடக்கின் அபிவிருத்திக்கு வட பகுதி மக்களே தடையென்பதை ஏற்க முடியாது


வடக்­கின் அபி­வி­ருத்­திக்கு வடக்கு மக்­களே தடை­யாக இருப்­ப­தாக கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் இரா­தா­கி­ருஷ்­ணன் குற்­றம் சாட்­டி­யுள்­ளமை சரி­யா­னதுதானா என்­பது கண்­ட­றி­யப்­பட வேண்­டும்.

வடக்­கு­டன் தொடர்­பில்­லாத மலை­ய­கத்­தைச் சேர்ந்த அர­சி­யல்­வா­தி­யொ­ரு­வர், வடக்­குத் தொடர்­பா­கத் தெரி­வித்த கருத்­துக்­கள் புற­மொ­துக்­கக் கூடி­ய­வை­யல்ல. அது மட்­டு­மல்­லாது கல்வி இரா­ஜாங்க அமைச்­சர், வட­ப­குதி மக்­கள் மீது கரி­சனை கொண்­ட­வர் என்­பதை மறுத்­து­ரைக்க முடி­யாது.

மலை­யக மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வ­ராக இருந்த அம­ரர் பெ. சந்­தி­ர­சே­க­ரன், தமி­ழர்­க­ளின் உரி­மைப் போராட்­டத்தை ஆத­ரித்த ஒரு­வர் என்­பதை நாம் மறந்­து­விட முடி­யாது.

அதே கட்­சி­யைச் சேர்ந்­த­வர் தான் இந்­தக் கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் வே. இராதாகிருஷ்­ணன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

போர் கார­ண­மாக வட பகுதி மூன்று தசாப்­த­கா­ல­மாக பெரும் அபி­வி­ருத்­தி­யையே காண­வில்லை

போர் இடம்பெற்­ற­தன் கார­ண­மாக சுமார் 30 வரு­டங்­க­ளுக்­கும் மேலாக வடக்­கில் அபி­வி­ருத்­திப் பணி­கள் எது­வும் இடம்­பெ­ற­வில்லை. சகல கட்­ட­மைப்­புக் க­ளும் அழி­வ­டைந்­தன.

மருத்­துவ மனை­க­ளும், பாட­சா­லை­க­ளும் கூடத் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளாகி அழி­வைச் சந்­தித்­தன. இந்த நிலை­யில் அபி­வி­ருத்­திக்­கான தேவை­கள் தற்­போது இங்கு அதி­க­மாக உள்­ளன.

வடக்­கைப் பொறுத்­த­வ­ரை­யில் மாகா­ண­சபை ஒன்று இயங்­கிக் கொண்­டி­ருக்­கின்­றது. மத்­திய அர­சு­டன் நல்­லு­றவை பேணி­வ­ரு­கின்ற கூட்­ட­மைப்­பின் ஆட்­சி­தான் வடக்கு மாகா­ண­ச­பை­யில் இடம்­பெற்று வரு­கின்­றது.

இத­னால் மத்­திய அரசு கூட்­ட­மைப்­பு­டன் இணைந்து வடக்­கின் அபி­வி­ருத்தி வேலை­க­ளைத் தடை­யின்றி மேற்­கொள்­ள­மு­டி­யும்.

வட­ப­குதி இளை­ஞர்­கள் வேலை­வாய்ப்­புக்­க­ளின்றி அதிக சிர­மங்­களை எதிர்கொண்டு வரு­கின்­ற­னர். இங்­குள்ள இளை­ஞர்­கள் தவ­றான வழி­யில் செல்­வ­தற்கு இது­வு­மொரு பிர­தான கார­ண­மா­கும். படித்த இளை­ஞர்­கள் அனை­வ­ருக்­கும் அரச வேலை­வாய்ப்­புக் கிடைக்­கு­மென எதிர்­பார்க்க முடி­யாது.

இத­னால் தனி­யார் துறை­க­ளையே அவர்­கள் நாட­வேண்­டி­யி­ருக்­கும். ஆனால் தெற்­கைப் போன்று வட­ப­கு­தி­யில் பொரு­ளா­தார மேம்­பாட்­டில் தனி­யார் துறை­யின் பங்­க­ளிப்பு பெரு­ம­ள­வில் இல்­லை­யென்­பதை ஒப்­புக்­கொள்ள வேண்­டும்.

நீண்ட கால­மாக இடம்­பெற்ற போர் கார­ண­மா­கத் தனி­யார் துறை­யி­னர் வடக்­கில் முத­லீடு செய்து தொழில்­களை ஆரம்­பிக்க விரும்­ப­வில்லை.

வட பகு­தி­யில் முத­லீ­டு­களை மேற்­கொள்ள முத­லீட்­டா­ளர்­கள் தயக்­கம்

தற்­போது போர் ஓய்ந்­து­விட்­ட­ போ­தி­லும், நாட்டில் மீண்­டும் போர் இடம்­பெ­றா­தென்­பதை அவர்­கள் முற்­று­மு­ழு­தாக நம்­ப­வில்லை. இதன் கார­ண­மாக அவர்­கள் வடக்­கில் முத­லீ­டு­களை மேற்­கொள்­ளத் தயக் கம் காட்டி வரு­கின்­ற­னர்.

இது ஒரு புற­மி­ருக்க, வடக்­கில் முன்­னர் இயங்­கிய காங்­கே­சன்­துறை சீமெந்து தொழிற்­சாலை, பரந்­தன் இர­சா­ய­னத் தொழிற்­சாலை, ஆனை­யி­றவு உப்­ப­ளம் ஆகி­ய­வற்­றில் ஏரா­ள­மான வட­ப­குதி மக்­கள் தொழில்­வாய்ப்­பைப் பெற்­றி­ருந்­த­னர்.

இத­னால் பொரு­ளா­தார ரீதி­யில் பல குடும்­பங்­கள் தன்­னி­றைவு பெற்று வாழ்ந்­தன. இன்று அவை மீள­வும் இயங்­கா­மை­யால் தொழில்­வாய்ப்­பும் இழக்­கப்­பட்­டு­விட்­டது.

ஒட்­டு­சுட்­டான் ஒட்­டுத் தொழிற்­சா­லை­யில் தொழில் வாய்ப்­பைப் பெற்­ற­வர்­க­ளும் அதை இழந்த நிலை­யில் காணப்­ப­டு­கின்­ற­னர். வட­ப­குதி மக்­கள் நாட்­டின் ஏனைய பகு­தி­க­ளி­லி­ருந்து தமக்­குத் தேவை­யான ஓடு­களை வர­வ­ழைக்க வேண்­டிய நிலை இன்று காணப்­ப­டு­கின்­றது.

இவற்­றை­விட சிறிய தொழில்­களை ஆரம்­பிப்­ப­தன் மூல­மா­க­வும் பல­ருக்கு வேலை வாய்ப்­பைப் பெற்­றுத் தர முடி­யும். மாகாண அரசு, மத்­திய அர­சின் ஆலோ­ச­னை­களை மற்­றும் நிதி­யு­த­வி­யைப் பெற்று இவற்றை ஆரம்­பிப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்ள முடி­யும்.

உல­கில் சகல துறை­க­ளி­லும் முன்­னணி நாடாக விளங்­கும் அமெ­ரிக்கா, தொழில் துறைக்கு ஈடாக விவ­சா­யத் துறைக்­கும் முக்­கி­யத் து­வம் வழங்­கி­ வ­ரு­கின்­றது.

இத­னால் முக்­கி­ய­மான உண­வுப் பொருள்­க­ளில் அந்த நாடு தன்­னி­றைவு பெற்­றுள்­ள­து­டன் வௌி நா­டு­க­ளுக்­கான ஏற்­று­ம­தி­யி­லும் ஈடு­பட்டு வரு­கின்­றது.

அமெ­ரிக்­கன் மாவென ஒரு காலத்­தில் அழைக்­கப்­பட்ட கோதுமை மாவு, அமெ­ரிக்க நாட்­டி­லி­ருந்து உல­கின் பிற நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக் கது.

நாடொன்­றின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் முக்­கிய பங்­கா­ளர்­கள் நாட்­டின் பொது­மக்­களே

ஒரு நாடு அல்­லது பிர­தே­சத்­தின் பொரு­ளா­தார வளர்ச்சி அங்கு வாழு­கின்ற மக்­க­ளின் முழு ஒத்­து­ழைப்­பு­டன் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும். வட­ப­கு­தி­யில் விவ­சாய நட­வ­டிக்­கை­கள் முக்­கிய இடத்­தைப் பிடிக்­கின்­றன.

வேறு பணி­க­ளில் உள்­ள­வர்­கள் கூட விவ­சா­யத்து­றை­யில் ஈடு­ப­டு­வ­தைக் காண முடி­கின்­றது. குடா­நாட்­டில் நீர்ப் பா­ச­னத் திட்­டங்­கள் இல்­லா­த­தால் நிலத்­தடி நீரை நம்­பியே மேட்டு நில­வி­வ­சா­யம் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தைக் காண முடி­கின்­றது.

நீர்ப்­பா­ச­னத் திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தன் மூல­மாக, குடா­நாட்டு விவ­சா­யி­க­ளின் நீர்த் தேவை­யைப் பூர்த்தி செய்­வ­தோடு, அவர்­க­ளது பொரு­ளா­தா­ரத்­தை­யும் அபி­வி­ருத்தி செய்­ய­மு­டி­யும்.

அது மட்டு­மல்­லாது வட­ப­குதி விவ­சா­யி­கள் தமது உற்­பத்­திப் பொருள்­களை நியா­ய­மான விலைக்கு விற்க முடி­யாது அவ­லப்­ப­டு­கின்­ற­னர். இடைத் தர­கர்­க­ளும், வியா­பா­ரி­க­ளும் அவர்­க­ளைத் தலை­தூக்க விடு­வ­தில்லை.

இந்த அவல நிலை நீக்­கப்­பட வேண்­டும். வட­ ப­கு­தி­யி­லேயே விவ­சா­யி­க­ளின் உற்­பத்­திப் பொருள்­களை நியா­ய­மான விலை­யில் விற்­பனை செய்­யக்­கூ­டிய வச­தியை உரிய தரப்­பி­னர்­கள் ஏற்­ப­டுத்­திக் கொடுக்க வேண்­டும்.

குடா­நாட்­டின் சில பிர­தான வீதி­கள் சீர் செய்­யப்­ப­டாத நிலை­யில் காணப்­ப­டு­வ­தால், மக்­கள் போக்­கு­வ­ரத்­துச் சிர­மங்­களை எதிர் கொண்டு வரு­கின்­ற­னர். இந்­தக் குறை­பாடு உட­ன­டி­யாக நிவர்த்தி செய்­யப்­ப­டல் வேண்­டும்.

ஒரு பிர­தே­சத்­தின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை ஆட்­சி­யா­ளர்­களே ஏற்­ப­டுத்த வேண்­டும். அபி­வி­ருத்­தியை விரும்­பாத மக்­கள் வட பகு­தி­யில் உள்­ள­தா­கக் கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

கடும் உழைப்­பா­ளி­க­ளான வட பகுதி மக்­கள், வாய்ப்­புக்­கள் கிட்­டு­மா­னால் நாட்­டின் பொரு­ளா­தார அபி­ வி­ருத்­திக்கு முக்­கிய பங்­காற்ற ஒரு போதும் பின்­நிற்க மாட்­டார்­கள். – Source: uthayan