ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – 250 பேர் உயிரிழப்பு ..!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 250 மக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலநடுக்கம் காரணமாக 150 ற்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் 6 தசம் 1 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 குறித்தப் பகுதிகளில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள Khost நகரில் இருந்து சுமார் 44 கிலோ மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!