சொகுசு வாழ்க்கையை உதறிவிட்டு சொந்த கிராமத்தில் இளைஞர் செய்யும் செயல்!

வெளிநாட்டில் லட்சங்களில் சம்பாதித்து வந்த தமிழர் வாழ்வில் எதையோ தொலைத்தது போன்று கருதி மேற்கொண்டுள்ள காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் நெல்லையை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ்.

இவருக்கு திருமணமாகி பிரியங்கா என்ற மனைவியும் பிரபஞ்சன் என்ற மகனும் உள்ளனர். ஓம் பிரகாஷ் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்துவிட்டு சவூதி, குவைத் போன்ற வெளிநாடுகளில் மாதம் லட்சக்கணக்கில் சம்பளத்துடன் வேலை பார்த்து வந்தார்.
    
அதாவது மொத்தமாக கோடிகளில் கூட வருமானம் பார்த்தார். கையில் பணம் கொட்டினாலும் வாழ்வில் ஏதோ ஒன்றை தொலைத்தது போன்று கருதினார்.

இதையடுத்து பணம் கொட்டும் வெளிநாட்டு வேலையை ஒரு நொடியில் உதறி தள்ளினார் ஓம் பிரகாஷ். பின்னர் கடந்த 2018ல் சொந்த ஊரான சிவந்திபுரத்தில் குடியேறிவிட்டார்.

அங்கு இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதில் இயற்கையான முறையில் தனது தேவைக்கு விவசாயம் செய்கிறார். அதைவிட குறிப்பாக ஓம் பிரகாஷ் தனது தோட்டத்தில் நாட்டு மாடுகளை வளர்த்து அந்த மாடுகளை அவரே முழுநேரமும் பராமரித்து வருகிறார்.

தாம் வெளிநாட்டில் வேலை பார்த்தோம் என்ற ஆடம்பரம் துளியும் இன்றி மிகவும் எளிமையாக கையில் கம்புடன் தினமும் காலை தனது மாடுகளை கூட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு செல்கிறார்.
பிரகாஷ் கூறுகையில், வெளிநாட்டில் வாழ்ந்தாலும் ஏதோ ஒன்றை தொலைத்தது போன்று நினைத்தேன். எனவே சொந்த ஊருக்கு திரும்பி இயற்கை பொருட்களை விற்பனை செய்யலாம் என்று நினைத்தேன்.

அதை செய்தும் வருகிறேன். இதோடு நான் சொந்த கிராமத்தில் எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்கிறேன் என திருப்தியுடன் கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!