நாட்டிற்கு வருகை தரும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி..!

நாட்டிற்கு வருகைதரும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் நாட்டிற்கு வருகைத்துள்ள பயணிகளின் எண்ணிக்கை வேகமாக குறைவடைந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலடைவதற்கு முன்பாக 28 ஆயிரம் பயணிகள் நாட்டில் இருந்து வெளியேறியதுடன் தொற்றுப்பரவலின் பின்னர் நாட்டிற்கு வருகைதரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்து காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும் தற்போதைய சூழ்நிலையில் , நாட்டிலிருந்து வெளியேறுபவர்கள் மற்றும் வருகை தரும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 10 ஆயிரமாக குறைவடைந்துள்ளதாக ஷெஹான்
சுமன்சேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜூன் மாதம் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 20, ஆயிரத்து 535 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!