மெக்சிகோவில் சொந்த மகளுக்கு தாயார் செய்த கொடுஞ்செயல்!

மெக்சிகோவின் Valle de Chalco பகுதியில் உள்ள குடியிருப்பில் தண்ணீர் தொட்டி ஒன்றில் இருந்து 3 வயது சிறுமியை பொலிசார் மீட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Valle de Chalco பகுதியில் உள்ள அந்த குடியிருப்பில் 5 அடி உயரம் கொண்ட தண்ணீர் தொட்டியில் இருந்து சிறுமி ஒருவர் அழும் குரல் கேட்டுள்ளது.
    
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு வந்த பொலிசார், சிறுமியின் அழுகுரலை உறுதி செய்ததுடன், தண்ணீர் தொட்டியில் சிக்கியுள்ள சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் குடியிருப்புக்கு திரும்பியதும், பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சிறுமியின் தாயார் லூசிலா தெரிவிக்கையில், அவர்கள் வேலைக்குச் செல்லும்போது தங்கள் குழந்தையைப் பார்க்க யாரும் இல்லை என்றும், எனவே அவர்கள் காலியான தண்ணீர் தொட்டிக்குள் அவளைப் பாதுகாக்க நினைத்தார்கள் எனவும் கூறியுள்ளார்.

விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சிறுமியுடன் காவல் நிலையம் திரும்ப இருந்த வேளையில், அதன் தாயாரும் வளர்ப்பு தந்தையும் வீடு திரும்பியதாகவும், சிறுமியை தவறாக நடத்தியதற்காக அவர்களை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரும் தலா 245 டொலர் பிணைத்தொகை செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!