இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க தயார் – இந்தியா

இலங்கைக்கு தொடர்ந்தும் மனிதாபிமான உதவிகளை வழங்கத் தயாராக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய மனிதாபிமான உதவிகள் அடங்கிய கப்பலொன்று நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய 3 பில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகள் அடங்கிய கப்பலொன்று இன்று முற்பகல் நாட்டுக்கு வருகை தந்துள்ளது.

மேலும், குறித்த கப்பலில் 15 ஆயிரம் மெட்ரிக் டொன் அளவிலான மனிதாபிமான உதவிகள் அடங்கியுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், அரிசி, பால்மா மற்றும் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கியதாக குறித்த மனிதாபிமான உதவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!