அரசியல் தஞ்சம் கோரியவரின் வாக்குமூலம்! மறுக்கிறார் பிள்ளையான்

குற்றச்சாட்டை மறுக்கும் பிள்ளையான்
தமது கட்சியின் உறுப்பினர் ஒருவர் வெளியிட்டதாக கூறப்படும் செய்திகளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் மறுத்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒருவர் முக்கிய கொலைகள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையி்ல் தகவல் வழங்கியுள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பில் எமது செய்திச்சேவை பிள்ளையானை தொடர்புக்கொண்டு வினவியபோதே, குறித்த ஊடகத்தில் வெளியான தகவல்களை மறுத்தார் அரசியல் தஞ்சம் கோருவதற்காக எவரும்,எதனையும் கூறலாம்.

இதனை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. எனவே அதுபோன்ற ஒரு நிகழ்வாக இந்த தகவலும் இருக்கலாம் என்று பிள்ளையான் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் மற்றும் காணாமல் போன சம்பவங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலைகள், ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் உட்பட்ட முக்கிய தகவல்களையே, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் குறித்த உறுப்பினர் வெளிப்படுத்தியுள்ளதாக கொழும்பின் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!