அமெரிக்காவில் இனி கருக்கலைப்பு சட்டவிரோதமாகிவிடும்: வெளியான பட்டியல்!

அமெரிக்க வரலாற்றில் மைல்கல்லாக மாறவேண்டிய ரோ வி வேட் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் 26 மாகாணங்களில் கருக்கலைப்பு சட்டவிரோதமானது அல்லது கடுமையாக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்பினால் 22 மாகாணங்களில் கருக்கலைப்பு தடை அல்லது கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரும் என தெரிய வந்துள்ளது.
    
இதில் அலபாமா, அரிசோனா, ஆர்கன்சாஸ், ஜார்ஜியா, இதாஹோ, அயோவா, கென்டக்கி, லூசியானா, மிச்சிகன், மிசிசிப்பி, மிசோரி, வடக்கு டகோட்டா, ஓஹியோ, ஓக்லஹோமா, தென் கரோலினா, தெற்கு டகோட்டா, டென்னசி, டெக்சாஸ், உட்டா, மேற்கு வர்ஜீனியா, விஸ்கான்ஸ் ஆகிய மாகாணங்கள் இடம்பெற்றுள்ளன.

இவை மட்டுமின்றி, புளோரிடா, இந்தியானா, மொன்டானா மற்றும் நெப்ராஸ்கா ஆகிய நான்கு மாகாணங்களிலும் கருக்கலைப்புக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவைத் தொடர்ந்து, கருக்கலைப்பு சட்டவிரோதமானது என்று டெக்சாஸ் அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் உடனடியாக அறிவித்தார்.

இதனிடையே, மேற்கு வர்ஜீனியாவில் கருக்கலைப்பு செய்யும் ஒரேயொரு மருத்துவமனையும் வெள்ளிக்கிழமை வெளியான தீர்ப்புக்குப் பிறகு தடை செய்துள்ளது.

விஸ்கான்சினில் முக்கிய மருத்துவமனை ஒன்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து மேடிசன் மற்றும் மில்வாக்கியில் உள்ள அதன் கிளினிக்குகளில் திட்டமிடப்பட்ட அனைத்து கருக்கலைப்பு சிகிச்சைகளையும் உடனடியாக நிறுத்தியது.

ஆனால் மிசிசிப்பியின் ஒரே கருக்கலைப்பு மருத்துவமனையானது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் நோயாளிகளுக்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!