
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் நகரப் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை இந்த வாரம் மூன்று நாட்களுக்கு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் நாட்டில் வழமையான முறையில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக வலுசக்தி அமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, குறித்த நகரப் பாடசாலைகளை இந்த வாரமும் மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்துடன், போக்குவரத்து சிக்கல்கள் காணப்படாத பட்சத்தில் இந்த வாரத்தின் மூன்று நாட்களுக்கு கிராமிய பாடசாலைகளை நடத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த கிராமிய பாடசாலைகளை செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் நடத்த முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக பாடசாலைகளுக்கு வருகை தராத ஆசிரியர்கள் தொடர்பில் குறித்த நாட்களை தனிப்பட்ட விடுமுறையாகக் கருத வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த தினங்களில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏதேனும் சிரமங்கள் காணப்படுமாயின் மாகாண கல்விப் பணிப்பாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள் ஊடாக மாகாண ஆளுநர்களுக்கு அறிவித்து தீர்மானமொன்றை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்காக இந்த வாரம் ஏதேனும் தவணைப் பரீட்சைகளை நடாத்த திட்டமிடப்பட்டிருக்குமாயின் அவற்றை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்குமாறும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!