தென்னாப்பிரிக்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 22 இளைஞர்கள்!

தென்னாப்பிரிக்காவின் தெற்குப் பகுதி நகரமான கிழக்கு லண்டனில் இருக்கும் இரவு நேர கேளிக்கை விடுதியில் ஞாயிற்றுக்கிழமை 22 இளைஞர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் தெற்கு லண்டன் பகுதியில் உள்ள சினரி பூங்காவிற்கு அருகில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில், 18 முதல் 20 வயதிற்கு உட்பட்ட 22 பேர் மர்மமான முறையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறைக்கு ஞாயிற்றுக் கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது என காவல்துறை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் தெம்பிங்கோசி கினானா தெரிவித்துள்ளார்.
    
இந்த சம்பவம் குறித்து கிழக்கு கேப் மாகாண சமூகம் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரி விசாரணை நடத்தி வருவதாகவும், ஆனால் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இளைஞர்கள் இறந்து இருக்கலாம் என கூறப்படும் கூற்றை காவல்துறை மறுத்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுத் தொடர்பாக காவல்துறை தெரிவித்துள்ள தகவலில், விடுதியில் இறந்துள்ள இளைஞர்களின் மீது எத்தகைய புறக் காயங்களும் இருப்பதாக தெரியவில்லை என்பதால் அவர்கள் கூட்டநெரிசலில் இறந்து இருக்க வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுத் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள அங்கீகரிக்கப்படாத புகைப்படங்களின் அடிப்படையில், இறந்துள்ள இளைஞர்கள் கேளிக்கை விடுதியில் உள்ள சோபாக்கள், நாற்காலிகள் ஆகியவற்றில் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

இரவு நேர விடுதியில் நடத்தப்பட்ட இந்த கேளிக்கை விருந்து மாணவர்கள் தங்களது தேர்வை நிறைவு செய்ததற்காக ஏற்பாடு செய்யபட்டது என்பது தெரியவந்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!