
உடல் நலம் சரியில்லாத தன்னை அருகிலிருந்து நளினி கவனித்துக் கொள்ள வேண்டி அவருக்கு 30 நாட்கள் பரோல் வழக்க வரது தாய் பத்மா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து கடந்தாண்டு டிச., மாதம் 27 ம் தேதி 30 நாட்களுக்கு பரோல் வழங்கப்பட்டது. இதனால் காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தாய் பத்மாவுடன் நளினி தங்கியிருக்கிறார்.
தொடர்ந்து ஐந்து முறை அவருக்கு பரோல் நீடிக்கப்பட்டது. மேலும் ஒரு மாதம் நளினிக்கு பரோல் நீட்டிக்க தமிழக அரசுக்கு பத்மா மனு அளித்தார். இதையடுத்து நளினிக்கு ஆறாவது முறையாக ஜூலை மாதம் 26 ம் தேதி வரை 30 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!